சென்னையில் துணிவு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் அஜித் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இறுதி கட்ட காட்சிகள் மட்டும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், இந்த படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியது. அதன்படி இந்த படத்திற்கு "துணிவு" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் ரிலீசாக இருக்கின்றது. நடிகர் விஜயின் வாரிசு படமும் பொங்கலில் ரிலீசாக இருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றுள்ளது. அஜித் மற்றும் மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu mmm movie shooting in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->