விஜய்யுடன் 5வது முறையாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகை.. 2வது நாளாக தொடரும் தளபதி 67அப்டேட்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 

லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற இந்த திரைப்படத்திற்கு தளபதி 67 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே நடைபெற்று விட்டது. ஆனால், இதுவரை படவேலைகள் ஆரம்பித்து விட்டதை பட குழு அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ப்ரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் ஆக்சன் கிங் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தளபதி 67 படத்தின் அப்டேட்களை படக்குழு அறிவித்து வருகிறது. அதன்படி தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு முன் விஜய்- திரிஷா ஜோடி திருப்பாச்சி கில்லி குருவி ஆதி ஆகிய 4 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thrisha act in thalapathy67 movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->