அமரன் படக்குழுவுக்கு கோரிக்கை விடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படம் உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

இந்தத் திரைப்படம் வெளியானது முதல் நாளிலிருந்தே நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரைக்கும் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதனையடுத்து இந்தப் படம், வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிவைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அதாவது, 'அமரன்' திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு படம் வெளியான எட்டு வாரங்கள் கழித்து ஓ.டி.டியில் வெளியிட வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

theaters owner association request amaran movie ott postpond


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->