வேற ரேஞ்சாகி போன தமன்னா.! மாஸ்டர் செஃப்புக்கு பயங்கர பிரம்மாண்டம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபலங்களாக இருக்கின்ற பலரும் பட வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட்டை இழந்த பின்னர் தான் சின்னத்திரையில் மற்றும் தொகுப்பாளராக களம் இறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஆனால், தற்போது இந்த நிலை மாறிவிட்டது. சினிமா துறையில் மிகப்பெரிய பிரபலமாக இருக்கும் போது அல்லது மார்க்கெட் நல்ல நிலையில் இருக்கும்போது கூட சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் பெரிய அளவில் நேரம் செலவிடாமல் நல்ல சம்பளம் கிடைக்கும்.

அந்த வகையில், நடிகர் சரத்குமார், ஆர்யா, சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, கமல், விஷால், சுருதிஹாசன், ராதிகா என்று பலரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் சென்ற நிகழ்ச்சியை பிரபல நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். 

இதே நிகழ்ச்சியின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க இருக்கின்றார். தற்போது அவர் செட்டில் இருக்கின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 thamanna in master cheff photo 


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal