விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான 'வாரிசு' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற விஜய் 67 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து உருவாக்கிய திரைப்படம் தான் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற காரணத்தால் விஜய் 67 படத்தின் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. சமீப காலமாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்படும் கேள்வி விஜய் 67 அப்டேட் தான்.

அப்போதெல்லாம் வாரிசு ரிலீசானால்தான் என்று லோகேஷ் ஒற்றை பதிலை கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகுவார். இந்நிலையில், தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் விஜய் 67 பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, "வாரிசு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் காத்திருந்தோம். இனி விஜய் 67 படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும்." என்று தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, விஜய் 67 படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்று ஓரிரு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் இது குறித்து எந்த ஒரு புகைப்படமும் படக்குழு சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy67 movie update soon lokesh kanagaraj


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->