'தளபதி 67' படத்தில் நடிப்பீர்களா? - பதிலளித்த நடிகர் கார்த்தி.! - Seithipunal
Seithipunal


மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சர்தார்'. நடிகர் கார்த்தி நடித்துள்ள இப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் 'கைதி 2' படம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அடுத்த வருடம் படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு வருகிறார். அந்த வகையில் கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி மற்றும் லோகேஷ் அடுத்ததாக இயக்கவுள்ள 'தளபதி 67' படத்தில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

அதன்பிறகு நடிகர் கார்த்தியிடம், 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணையவுள்ளீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, "அது குறித்து தெரியவில்லை. அது எளிதானதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். ஆனால், இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அந்த படங்களில் நடிப்பது  தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathi 67 movie acter karthi answer


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->