''தலைவர் 171'' திரைபடத்தில் நியூ அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
Thalaivaar 171 update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு தற்காலிகமாக ''தலைவர் 171'' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.