எனக்கு சுஷாந்த் விட்டுச் சென்றுள்ள ஒரே சொத்து இது தான்.! சுஷாந்த் எழுதிய கடிதத்தை வெளியிட்ட ரியா.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் இளம்வயதில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகராக இருந்த சுஷாந்த் சிங் திடீரென கடந்த மாதம் 14-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலை பாலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சர்ச்சைகளும் உருவாகி வருகிறது. 

இந்தநிலையில், சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில், அவருடைய காதலி, ரியாவுக்கு எதிராக சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுஷாந்த் சிங்கை ரியா தற்கொலைக்கு தூண்டியதாகவும், பொருளாதாரரீதியாக அவரை ஏமாற்றி விட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். சுஷாந்த்சிங் தற்கொலையில் அவரது காதலி மீது சுஷாந்தின் தந்தை புகார் கொடுத்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழலில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி சுஷாந்தின் டைரியிலிருந்து ஒரு பக்கத்தை பகிர்ந்துள்ளார்.

சுஷாந்த் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில், தன்னை நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த தன் மனம் கவர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை ரியா மற்றும் தன் அப்பா, அம்மா மற்றும் செல்ல பிராணியான நாய்க்கும் நன்றி சொல்லியள்ளார் சுஷாந்த்.

இந்த வாட்டர் சிப்பர் மட்டும் தான் எனக்கு சுஷாந்த் விட்டுச் சென்றுள்ள ஒரே சொத்து என ரியா தெரிவித்தள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sushant singh diary released by rhenna


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal