தமிழ் நடிகர்களின் பேராசை, அதிர்ச்சியில் கோலிவுட்.! விஜய், சூர்யா வரிசையில் இளம் நடிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பின் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இதனை தில்ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. 

இது நேரடியாக தெலுங்கில் உருவாக்கப்படும் படமாகும். விஜய்யை போல அடுத்ததாக சூர்யாவும் தெலுங்கில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற இந்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 

விஜய்யை தொடர்ந்து பல்வேறு தமிழ் முன்னணி நடிகர்களும் நேரடியாக தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இருக்கின்றனர். 

தமிழ் நடிகர்களின் இந்த முடிவால் தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். காரணம், தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அங்கே அதிக சம்பளம் வாங்கிய ருசி கண்ட நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் அதையே எதிர்பார்ப்பார்கள் என்பதுதான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya may act in telugu movie


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal