சூர்யாவின் 44-வது படத்தை இயக்க போவது யார்? வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதையடுத்து அவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த நிலையில், சூர்யா நடிக்க இருக்கும் 44-வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, 'சூர்யா 44' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் பின்னணியில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்க ரப்பர் மரம் ஒன்றில் அம்பு குத்தப்பட்டுள்ளது. மேலும், போஸ்டரில் 'லவ் லாப்டர் வார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya 44 movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->