யோகிபாபுவை கால்செய்து பாராட்டிய கிரிக்கெட் வீரர்.! அவரே வெளியிட்ட பதிவு.!  - Seithipunal
Seithipunal


தமிழ்த்திரையில் தற்போது முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு. தனது அசாத்தியமான நடிப்பையும், திறமையையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார். 

கடந்த வாரம் இவரது இரண்டு திரைப்படங்கள் வெளியானது. கர்ணன் மற்றும் மண்டேலா திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

மண்டேலா திரைப்படத்தில் யோகி பாபு நடித்த நடிப்பு தற்போதும் பெரிதளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகின்ற ஸ்ரீவத்சவ் நடிகர் யோகிபாபு குறித்து பேசியிருக்கிறார். 

இரு தினங்களுக்கு முன்பாக மண்டேலா திரைப்படம் பார்த்ததாகவும், அதில் யோகி பாபு அசாத்தியமாக தன்னை கவர்ந்து இருப்பதாகவும் இவர் கிரிக்கெட் வீரரான நடராஜன் நண்பர் என்பதும் தெரியவந்தது. எனவே அவருக்கு வீடியோ கால் செய்து பேசியதாக தெரிவித்தார். ஒரு ரசிகனாக அவரிடம் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivadsad speech about yogi babu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal