மீண்டும் படத்தில் நடிக்கவுள்ள ஸ்ரீ தேவி விஜயகுமார்.?! இன்ஸ்டாகிராம் பதிவு.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜயகுமார். இவர் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். இவர்களது குடும்பம் திரைத்துறையை சேர்ந்த குடும்பம் என்பதால் இவர்களது வாரிசுகளும் திரைத்துறையில் தடம் பதித்தனர். 

அந்தவகையில் விஜயகுமார் மகன் அருண் விஜய் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றார். முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வனிதா விஜயகுமார் குறித்து அனைவருக்குமே தெரியும். இவர்களை விட அதிக திரைப்படங்களில் நடித்தது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தான்.

சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார். தொடர்ந்து, தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி, காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். பின்னர், ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். 

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம் அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SRI DEVI VIJAYAKUMAR INSTAGRAM POST


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal