அடேங்கப்பா.. 4 நாட்களில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வசூல் இவ்வளவா.? - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனையடுத்து அடுத்த படத்தில் நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் தீவிரம் காட்டி வந்தார்.

அதன்படி மண்டேலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி முதல் நாளில் தமிழகத்தில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் 4 நாட்களில் மொத்தமாக 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SK in maveeran movie collected 50 crores


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->