பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளியான "SK 23" UPDATE - Seithipunal
Seithipunal


"SK 23" படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம், ரசிகர்களிடையேயே  நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  நடிகர் சிவகார்த்திகேயன்   'எஸ்கே 23' படத்தில் நடித்து வருகிறார்.  


இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.மேலும், நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

\

இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் 80 சதவீதம் நிறைவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் வரும் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு திரையிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.அய்யப்பனும் கோஷியும் என்ற  படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கிய பிஜு மேனன் அப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SK 23 update released amid various controversies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->