மீண்டும் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டாக்டர். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் தயாரித்து இருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

வெளியாகிய முதல் நாளிலேயே இந்த திரைப்படம் 9.84 கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தையும் நெல்சன் திலிப்குமர் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போவதாகவும் இந்த திரைப்படத்தையும் நெல்சன் திலிப்குமர் தான் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan Again with Nelson dileepkumar 


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal