#STR48 : சிம்புவின் அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். ஒரு புறம் நடிப்பிலும், மறுபுறம் தயாரிப்பிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

 அந்த வகையில் நடிகர் சிம்பு நடிக்கும் 48 வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிக்கும் 48 வது படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்ட போது அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக சிம்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை படக்குழு ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது சிம்பு, கமல், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu in 48 movie update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->