ராஜா ராணி 2வில் புதிய சந்தியா யார் தெரியுமா.?! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விஜய் டிவி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான் ராஜா ராணி இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்தனர். 

இரண்டாவது பாகத்தில் சஞ்சீவுக்கு பதில் சித்தூ நடித்து வருகிறார். முதல் குழந்தை பிறந்த பின்னர் இயல்பு நிலைக்கு மாறிய ஆலியா இந்த தொடரின் ஆரம்பம் முதல் நன்றாக நடித்து வருகின்றார். தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். 

Sidhu Shreya. Love on Twitter: "This scene always remains evergreen 💚  #SanJan #Thirumanam https://t.co/A9mOn25AQr" / Twitter

காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்க அவருக்கு குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த கதை தான் ராஜா ராணி 2. கர்ப்பமான நிலையில் ஆலியா சீரியலில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் அவர் சீரியலில் இருந்து விலகினார். 

தற்போது நடித்து வரும் சந்தியா கதாபாத்திரத்தில் சித்துவின் மனைவி ஸ்ரேயா நடிக்க உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திருமணம் சீரியல் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sheriya comes to raja rani 2 serial


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->