நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்!!
நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் அதிகம் பேர் விரும்பி பார்த்த சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வரும் பிரபல சீரியல் நடிகரான விஜயராஜ் இன்று மரணமடைந்தார். அவருக்கு தற்போது வயது 43 ஆகும். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தார்.

இந்நிலையில் இன்று பழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். இவரது மறைவு சின்னத்திரைநடிகர் நடிகைகளையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.