சந்தானம் ரசிகர்களுக்கு இனி டபுள் கொண்டாட்டம்.! வெளியான அதிமுக்கிய அறிவிப்பு.!
santhanam son in prabu deva movie
சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தனது நகைச்சுவை மற்றும் டைமிங் வசனங்களின் மூலம் இன்று தமிழில் முன்னணிநடிகராக வலம் வருபவர் சந்தானம்.
கடந்த மாதம் சந்தானம் நடிப்பில் வெளியான "பிஸ்கோத்" திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சந்தானத்திற்கு சர்வர் சுந்தரம் மற்றும் டிக்கிலோனா திரைப்படங்கள் இன்னும் வெளியாவதற்கு கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது "பாரீஸ் ஜெயராஜ்" என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தை ஜான்சன்.கே என்பவர் இயக்குகிறார்.
இச்சமயத்தில் சந்தானத்தின் மகன் நிபுன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என புகழப்படும் பிரபுதேவா அடுத்ததாக இயக்கும் இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.
English Summary
santhanam son in prabu deva movie