சினிமாவில் அடுத்த கட்டத்திற்குச் சென்ற சந்தானம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


லொள்ளு சபா மூலம் சின்னத்திரையில் கலக்கி பின் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். கோலிவுட்டில் ஒரு காலத்தில் நகைச்சுவை நடிகராக நிறைய படங்களில் நடித்தார். அத்துடன் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

இவரது நகைச்சுவை கவுண்டர்கள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். இவை கவுண்டமணியின் சாயலில் இருக்கிறது என்றும் பலர் தெரிவிப்பார்கள். வடிவேலு பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் பின்தங்க துவங்கியது சந்தானத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. 

பின்னர் நகைச்சுவை படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமீபகாலமாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.‌‌ அதிலும் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக பலரும் ஹீரோ ஆசையால் கேரியரை இறக்கப் போகிறார் என்று விமர்சித்தனர். 

இத்தகைய நிலையில் சபாபதி, டிக்கிலோனா திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கர்நாடக இயக்குனர் பிரசாந்த் ராஜு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இது குறித்த தகவலை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam in kannada Director movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->