இதனால் தான் விஜய் தளபதி.. நடன இயக்குனரை நெகிழவைத்த நடிகர்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கிய வரும் திரைப்படம் தான் வாரிசு படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதில், நடிகை குஷ்பூ, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்ட நிறைய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இதில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது  இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் தீ தளபதி எனும் பாடலை நடிகர் சிம்பு சம்பளமே வாங்காமல் பாடி இருக்கின்றார். இந்த திரை பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்து இருக்கின்றார். இந்த நிலையில் சாண்டி மாஸ்டருக்கு ஒரு பூங்கொத்து மற்றும் ஸ்வீட் அனுப்பி விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். 

இது குறித்த புகைப்படத்தை சாண்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "விஜய் சாரின் அன்பு நிறைந்த பரிசு. இதனால் தான் அவர் தளபதி." என்று தெரிவித்து இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sandys Gift From Vijay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->