அஜித்தின் 61வது படத்தில் கைகோர்த்த சமுத்திரகனி.! "100 சதவீத உழைப்பை போடுவேன்."-சூளுரை.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் அஜித் குமார் தற்போது தனது 67வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்தின் 67வது திரைப்படம் என்ற காரணத்தால் இந்த படத்திற்கு AK61 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. 

வலிமை படத்திற்கு அப்டேட் கொடுக்காமல் இருந்ததைப் போல இந்த படம் குறித்த அப்டேட்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், கோலிவுட் வட்டாரங்களில் இருந்து நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஆனால், அறிவிப்பு கூட வெளிவரவில்லை என்று அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். 

இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், AK61 திரைப்படத்தில் சமுத்திரக்கனி தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். 

"தம்பி எச்.வினோத் இயக்கத்தில் அஜித் சார் கூட பண்ணுகிறேன். அது ஒரு அற்புதமான கதை களம். எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எனது நூறு சதவீத உழைப்பை கொடுப்பேன். ரொம்ப பெருமையாக இருக்கிறது." என்று சமீபத்தில் ஒரு பதிவிட்டு சமுத்திரக்கனி தான் இந்த படத்தில் இருப்பதை உறுதி செய்து அப்டேட் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samuthirakani update about ak61


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->