அசத்தல்.. சமந்தா கூறிய குட் நியூஸ்..! சினிமாவுக்கு முழுக்கு போடுவாரா?! - Seithipunal
Seithipunal


கடந்த 4ம் தேதி  The Family Man Web series-ன் இரண்டாவது பாகம் அமேசான் பிரைமில் வெளியாகியது. இதன் ட்ரெயிலர் வெளியான நேரத்தில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் அவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து இருப்பதாகவும் எதிர்ப்பை சந்தித்து இருந்தது. 

அத்துடன், இரண்டாவது பாகத்தில் நடித்திருந்த சமந்தா, பிரியாமணி போன்றோருக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வைகோ, பாரதிராஜா, சீமான் ஆகியோர் இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்க, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். 

இப்படி பல எதிர்ப்புகள் இருந்தும் கூட அந்த வெப் சீரிஸ் வெளியாகி நிறைய எதிர்ப்புகளை பெற்றது. இதில் நடித்த காரணத்தால் சமந்தாவுக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இதற்கு காரணம் சமந்தாவுக்கு அந்த வெப்சைடில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் தான். தனது திறமையை அழகாக காட்டி நடித்து இருப்பார் சமந்தா. 

தற்போது அவர் ஆடை அணிகலன்கள் விற்கும் தொழில் ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவைப் போலவே தொழிலிலும் அவர் கொடி கட்டி பறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha starts New Business


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal