கணவன் மனைவியாக சமந்தா-பகத் பாசில்.?! லோகேஷ் ரசிகர்களுக்கு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். 

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் வில்லியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பஹத் பாசிலுடன் மற்றொரு புதியபடத்தில் இணைய உள்ளதாக வீடியோ காலில் உறுதிப்படுத்தினார். எனவே, அவர் தளபதி 67 நடிப்பதை தான் குறிப்பிடுகிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தளபதி விஜய்க்கு வில்லனாக பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமந்தா வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் சமந்தாவுக்கு கணவனாக பகத் பாசில் நடிக்கலாம் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசில் மற்றும் சமந்தா இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha and fahat fasil in Thalapathy 67


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->