சாய்பல்லவியை சிறுவயதில் பார்த்துள்ளீர்களா.! அவரே வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாய் பல்லவி. இந்தத் திரைப்படத்திற்கு முன்பு நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். 

தற்போது அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக மிளிர்ந்து வருகிறார். சாய்பல்லவி தமிழில் தியா படத்தின் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார். 

பின்னர் தமிழில் மாரி 2, என் ஜி கே மற்றும் பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவிக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஃபிடா திரைப்படத்தில் சாய்பல்லவி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் .

தனுஷின் மாரி திரைப்படத்தில் சாய்பல்லவி நடனமாடிய ரவுடி பேபி பாடல் தற்போது வரை மிகப்பெரிய அளவில் ஹிட்டாக இருக்கிறது. சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

சமூக வலைதளங்களில் நடிகை சாய் பல்லவி யும், அவரது தங்கை பூஜா கண்ணனும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைபூஜா வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்கள். பூஜா கண்ணன் அச்சு அசலாக சாய்பல்லவி போலவே இருப்பார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sai Pallavi childhood photo viral


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal