விருதுகளை அள்ளி குவிக்கும் RRR திரைப்படம்.. ஆஸ்கரை வெல்லுமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு? - Seithipunal
Seithipunal


பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த இயக்குனர் ராஜமௌலி. அதன் பிறகு அவர் இயக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.  

இதனையடுத்து இயக்குனர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜீனியர் என்டிஆரை வைத்து 'RRR' என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கினார். மேலும், இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் அலியா பட் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 28-வது கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் என இரு முக்கிய விருதுகளை ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் வென்றுள்ளது. 

சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற  'நாட்டு நாட்டு' பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR movie won 2 awards crictics choice awards


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->