இந்திய இராணுவ வீரர்களை கொச்சை படுத்திய பாலிவுட் நடிகை பகிரங்க மன்னிப்பு - விடாமல் அடிக்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானிடம் இருந்து PoKஐ திரும்பப் பெற முடியும் என்று இந்திய ராணுவம் கூறியதை தெரிவித்ததற்கு, இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்தும் வகையிலும், இராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்தும் வகையிலும் "கல்வான் வணக்கம்" என்று பாலிவுட் நடிகை ரிச்சா சதா டிவிட்டரில் பதிவிட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டங்கள் எழுந்த நிலையில், தனது தவறுக்கு மன்னி கேட்பதாக நடிகை ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், "ஒரு போதும் என் நோக்கமாக அது இருக்க முடியாது என்றாலும், சர்ச்சையில் இழுக்கப்படும் 3 வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், 

மேலும் தற்செயலாக என் வார்த்தைகள் இந்த உணர்வைத் தூண்டியிருந்தால், அது எனக்கு வருத்தமாக இருக்கும். என் சொந்த வாழக்கையில் ஒரு சகோதரர்கள். லெப்டினன்ட் கேணலாக இருந்த அவர், 1960 களில் நடந்த இந்திய-சீனப் போரில் காலில் குண்டு பாய்ந்து காலமானார். 

எனது மாமா ஒரு பாராட்ரூப்பர். அது என் ரத்தத்தில் இருக்கிறது. எங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட தேசத்தைக் காப்பாற்றும் போது அவர்களின் மகன் தியாகி அல்லது காயம் அடைந்தால் ஒரு முழு குடும்பமும் பாதிக்கப்படுகிறது, அது எப்படி உணர்கிறது என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். இது எனக்கு ஒரு உணர்ச்சிப் பிரச்சினை" என்று விளக்கமளித்து உள்ளார்.

இருப்பினும் நடிகை ரிச்சா சதாவின் கணவர் ஒரு இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய தேசத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி, நடிகை அவரின் கணவரின் முந்தைய பதிவுகளை எடுத்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், நடிகை ரிச்சா சாதாவுக்கு எதிராக ஜூஹூ காவல்நிலையத்தில் (மும்பை) புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவத்தை ஏளன படுத்தினால் பாகிஸ்தானில் என்ன தண்டனை வழங்கப்படுமா அந்த தண்டனையை கொடுக்க வேண்டும் என்று அதில் கோர பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

richa chadha


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal