நாங்க கூட சும்மா தான் இருக்கோம்.. ராஷ்மிகாவால் மனம் வெதும்பிய ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ராஷ்மிகா மந்தனா தனது நாயுடன் கொஞ்சிக் குலாவும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதனையடுத்து இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு மற்ற மொழிகளை விட தமிழில் தான் ரசிகர்கள் அதிகம் என்பதால் தமிழில் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா' திரைப்படத்திலும், ஹிந்தியில் 'மிஷன் மஜ்னு' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாயுடன் கொஞ்சி குலாவி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதைத் தொடர்ந்து ரசிகர்கள் நாங்கள் கூட சும்மா தான் இருக்கோம் எங்களுடனும் விளையாடலாமே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika playing with her dog


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal