199 ரூபாய்., வெளியானது அறிவிப்பு! சேதுபதியின் ரணசிங்கம்! - Seithipunal
Seithipunal


நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. ஓடிடி தளத்தில் நடிகை ஜோதிகாவின் திரைப்படம் வெளியானதால், திரையரங்க உரிமையாளர்கள் இனி ஜோதிகாவின் குடும்பத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். இதேபோல் நடிகர் சூர்யாவின் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் தயாராகியுள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி ரணசிங்கம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று தெரிவித்திருந்தார். 

தற்போது அந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில்,  க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 199 ரூபாய் செலுத்தினால் ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranasingam release in ott rate 199


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->