படையப்பாவுடன் கைக்கோர்க்கும் நீலாம்பரி.?! ஜெயிலர் பட அப்டேட் கொடுத்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஆனால், இணையத்தில் பலரும் இது குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இது குறித்து எதுவும் கவலைப்படாமல் படக்குழு பட வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்,
ஒரு ஜெயிலர் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. 

அதில், நடிகை ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகம் உள்ளிட்டோர் ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் இவர்கள் இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramya krishnan In jailer Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->