ராம்சரன - ஷங்கர் படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மீண்டும் அரசியல் கதைகளமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் டாப் டென் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்  சங்கர். பிரம்மாண்டமான இயக்கத்திற்கு பெயர் போன இவர் தமிழ் சினிமாவில் பலவெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்

மேலும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான  ராம்சரணை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜயின் வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்தினை பற்றிய ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் அறிவிப்பு  ராம்சரண் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 27ஆம் தேதி வெளியிடயிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என்ற ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்கர் இதற்கு முன் நடிகர் அர்ஜுனை வைத்து இயக்கிய அரசியல் திரைப்படமான முதல்வன் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ram Charan Shankar movie title game changer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->