ரிலீசுக்கு முன்பே வசூலை குவிக்கும் ரஜினியின் ஜெயிலர்.. அடேங்கப்பா இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும், இந்த படத்தில் ரஜினியுடன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரப், விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாளை உலகம் முழுவதும் திரையங்களில் வெளியாக உள்ளது.  இதனையடுத்து ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி ஜெயிலர் திரைப்படம் வியாபாரம் மற்றும் டிக்கெட் முன்பதிவின் மூலம் பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இதில், மாநில வாரியாக விலை போன விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 62 கோடி ரூபாய்க்கும், கர்நாடகாவில் 10 கோடி ரூபாய்க்கும், கேரளாவில் 5.5 கோடி ரூபாய்க்கும், ஓவர்சீஸ் 30 கோடி ரூபாய் என மொத்த வியாபாரம் ரூ.122.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth in Jailor business 122.5 crores


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->