"நீங்கள் இல்லாமல் நான் இல்லை" அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு நாற்பத்தி ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறார். 

இந்த நாளைக் கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை வெளியிட்டார்கள். நடிகர் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த நாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதில், "என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻 நீங்கள் இல்லாமல் நான் இல்லை 🤘🏻" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini tweet about his 45 years of cinema entry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->