ஓடிடிக்கு தயாராகும் ராயன் - எப்போது தெரியுமா?
raayan movie ott update
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தனுஷ் தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்தப் திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவாகியுள்ளது. ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார்.

'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்த இந்த படம், முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'ராயன்' படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சன் என்எக்ஸ்டி தளத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.