இவர் இல்லாமல் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியா.?! எண்ட்ரீ கொடுக்கும் பிரபலம்?! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அப்படி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், தான் குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கியது. இதில், ஷ்ருதிகா, மனோபாலா, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், ரோஷினி ஹரிபிரியன், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், ஆண்டனி தாசன் ஆகியோர் குக்காக பங்கேற்று இருக்கின்றனர்.

இந்த சீசனில் கோமாளிகளாக மணிமேகலை,  குரேஷி, சுனிதா, சூப்பர் சிங்கர் பரத், ஷிவாங்கி சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன், சக்தி, ஷீத்தா கிளாரின், பாலா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2 சீசனில் கலந்துகொண்ட புகழ் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு காரணம் அவர் கோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வருவது தான். சமீபத்தில், இவரது நடிப்பில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் சேர்ந்து நடித்த சொல்லப் போகிறாய் படம் ரிலீசானது. புகழுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puhazh entry on CWC 3


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->