பூவே பூச்சூடவா நடிகையின் புதுவிதமான போஸ்.! வெட்கப்படும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா மெகாத்தொடரின் மூலம், தமிழகத்தில் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கொள்ளயடித்தவர் ரேஷ்மா. மாநிறம்தான் என்றாலும் கூட இவர் சிரிக்கும்போது கன்னங்களில் விழும் அழகான குழி மற்றும் அழகான முகம் என்று அனைத்து ரசிகர்களையும் கிறங்கடித்து வருபவர். 

நடனமாடுவதை அடிப்படையாக கொண்டவர். அவ்வகையில் நடன நிகழ்ச்சி மூலமாக தனது  அத்தியாயத்தை தொடங்கினார். கடந்த 2015 ம் ஆண்டு  சென்னையில் நடந்த ஒரு மாடல் அழகிக்கான விழாவில் முதல் பத்து இடத்திற்க்குள்ளாக வந்திருந்தார்.

அதே போல் கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதே போன்று ஒரு விழாவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ஷோவில் அறிமுகமானார்.

இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடைதான் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து தான் இவருக்கு பூவே பூச்சூடவா மெகாதொடரில் வாய்ப்புக்கிடைத்தது. இத்தொடரில் சக்தி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றார். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் அவரை சிவப்பு தேவதையே என வர்ணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poove poochudava actress latest photoshoot on Instagram


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal