மாஸ் காட்டும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு.. 6 ஆசிய திரைப்பட விருதுகள்! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த செப்டம்பரில் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 16-வது ஆசிய திரைப்பட விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை பரிந்துரைக் குழு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல்பாகம், சிறந்த படம், சிறந்த ஒரிஜினல் இசை (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்), சிறந்த கலை இயக்குனர் (தோட்டா தரணி), சிறந்த உடை அலங்காரம் (ஏகா லஹானி) உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எஸ்.எஸ். ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாஸ் மோகன்), சிறந்த ஒலி (அஷ்வின் ராஜசேகர்) 2 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 12-ம் தேதி ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பேலஸ் மியூசியத்தில் இரவு 7.30 மணிக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan movie nominees 6 category in Asia Awards


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->