விஜயின் 68-வது படத்தை இயக்கப்போவது இவரா.? இயக்குனரே கூறிய தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ள நிலையில், அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

அடுத்ததாக நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாக உள்ளது.

 இத்தகைய சூழலில் அவருடைய 67-வது திரைப்படத்தை மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதனை கலைபுலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜயின் துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் விஜய் போன்ற நடிகர்களுக்கு ஒரு காலத்தில் ஹிட் படங்களை கொடுத்து உயர்த்திய இயக்குனர் பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில், "நடிகர் விஜயின் 68வது திரைப்படத்தை நான் தான் இயக்கப் போகிறேன். நிச்சயம் எனக்குத்தான் வாய்ப்பு கொடுப்பார்." என்று தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perarasu about vijay 68 movie 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->