அடேங்கப்பா.! பசங்க பட குட்டிப் பையனுக்கு சீரியல் நடிகையுடன் டும்..டும்.!
Pasanga Actor Kishore may marry with preethi Kumar
கடந்த 2009 இல் வெளியாகிய பசங்க படம் நல்ல ஹிட் ஆனது. அதன் இரண்டாவது பாகம் 2015ல் வெளியாகியது. இந்த பசங்க படத்தில் நடித்த கிஷோருக்கு பல விருதுகள் கிடைத்தது. அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றன.

பசங்க படம் வெளியாகி 13 வருடங்களுக்குப் பின் சமீபத்தில் கிஷோருக்கு தமிழக அரசின் விருதும், தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை கிஷோர் காதலிப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரீத்தி குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி, "உன்னை திருமணம் செய்ய போகும் நாளுக்காக காத்திருக்கிறேன். அடுத்த வருடம் கணவன், மனைவியாக இந்த பிறந்த நாளை கொண்டாடலாம். லவ் யூ!" என்று கூறியுள்ளார்.

ப்ரீத்தி குமார் ஆபீஸ் சீரியலின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் வள்ளி, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, கேளடி கண்மணி, கோபுரங்கள் சாய்வதில்லை மற்றும் வானத்தைப்போல போன்ற சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pasanga Actor Kishore may marry with preethi Kumar