6 ஆண்டுகள்.. காதல் தொல்லை.. காதலித்தவர் குறித்து ஓபனாக மேடையில் பேசிய நித்யா மேனன்.! - Seithipunal
Seithipunal


நடிகை நித்யா மேனன் தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக நித்யா மேனன் நடித்து வருகிறார். 

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருதுகளை நித்யாமேனன் பெற்றுள்ளார். அவரது முதல் விருதை பெற்ற போது அவருக்கு 17 வயதுதான். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். 

மேலும்,அவர் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில், திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுவது நித்யா மேனனின் திருமணம் குறித்த விஷயம்தான். மலையாளத்தில் ஆராட்டு பட தனது விமர்சனத்தின் மூலம் பிரபலமடைந்த சந்தோஷை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, " சந்தோஷ் என்னை மிகவும் சிரமப் படுத்தினார். 6 ஆண்டுகள் என்னை பின் தொடர்ந்து நிறைய வதந்திகளை பரப்பி தொல்லை கொடுத்தார். 30-க்கும் எண்களில் இருந்து எனக்கு கால் செய்து தொல்லை கொடுத்தார். என் தாய் தந்தைக்கும் அவரால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவர் மீது போலீசில் புகார் கொடுக்கச் சொல்லி பலரும் என்னை வற்புறுத்தினார்கள். ஆனால் நான் அவரை மன்னித்து விட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nithya Menon about 6 years men Following


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->