ஜனநாயகன் படம் விரைவில் ரிலீஸ் ஆகுமா..? சென்சார் போர்டின் ரிவைசிங் குழு கொடுத்துள்ள புதிய அப்டேட்..! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது முதல் விஜய் முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக இன்றுவரை படம் வெளிவராமல் உள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டின் ரிவைசிங் குழு பார்ப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.-ற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் ஜனநாயகன் படத்திற்கு அடுத்த வாரம் சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இவை சீக்கிரம் நடந்து முடிந்தால் ஜனநாயகன் படத்துடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் 19-ஆம் தேதியாக இருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கடந்த 02 நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New update from the Censor Boards revising committee on the film Jananayagan


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->