இந்தியாவில் மட்டும் அல்லாமல் இந்த நாட்டிலும் நேர்கொண்ட பார்வை வெளியிடப்படும்., தயாரிப்பாளர் தகவல்!! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். தமிழில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தை போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கிறார். இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார் இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்தநிலையில் படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

இந்தநிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியதாவது, பிங்க் படத்தின் கதையை மட்டும் வைத்துக் கொண்டு அஜித்துக்கு ஏற்ற சில மாற்றங்களை செய்து தமிழில் இப்படத்தை உருவாக்கி உள்ளோம். இபபடத்தின் இயக்குனர் வினோத் அஜித்தின் மாஸ் இமேஜ்யை மனதில் வைத்துக் கொண்டு சிறப்பாக கதை அமைத்துள்ளார். பிங்க் படத்தின் இயக்குனர் அனிருத்தா ராய் சவுத்ரி நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து சிறப்பாக இருப்பதாக கூறினார்.

சீனாவில் இந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சீனாவில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. சீனர்கள் நல்ல கதையை மட்டுமே எதிர்பார்ப்பார்கள் எல்லாம் நன்றாக நடந்தால் மேற்கொண்ட பார்வை படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் திட்டமும் இருக்கிறது என போனி கபூர் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரித்து ஸ்ரீ தேவி நடித்த மாம் என்ற படம் சீனாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று. கிட்டத்தட்ட 16 மில்லியன் வசூல் செய்தது. ஏற்கனவே  மாம் படம் மூலம் சீனாவில் கால்பதித்து  வெற்றி பெற்ற போனிகபூர் நிச்சயம் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nerkonda parvai release in china


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal