காமெடி நடிகருடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்..!!  - Seithipunal
Seithipunal


திரை துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. 15 ஆண்டுகாலமாக திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் அவர், தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர், குறிப்பிட்டு சில நல்ல கதைகளையும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளையும் தேர்வு செய்து நடித்துவருகிறார்.
 
இதை தொடர்ந்து, தற்போது ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், முன்னதாக இருவரும் நானும் ரௌடி தான், வேலைக்காரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார்கள். பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வந்த ஆர்.ஜே. பாலாஜி, இந்த ஆண்டு தொடக்கத்தில், தானே எழுதி இயக்கிய ‘எல்.கே.ஜி'படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். 

இந்த படத்தில், அரசியல் கேளிக்கை படமான எல்.கே.ஜி அவருக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. இந்த படத்தில் அரசியல் பிரமுகர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பாலாஜிக்கு அப்பாவாக நடித்திருந்தது குறிப்பிடதக்கது.

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘மூக்குத்தி அம்மன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. இதில் தான் நயன்தாரா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara join hand with r.j.balaji


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal