ஓ.டி.டியில் வெளியாகும் நயன்தாராவின் மாய நிழல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் 'நிழல்' என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 'மாய நிழல்' என்ற பெயரில் வெளியானது. 

பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கியுள்ள இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார். குழந்தையை மையமாக கொண்டு வெளியான இந்த திரில்லர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. 

அதுமட்டுமல்லாமல், இந்தப்படத்தில் இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், 'மாய நிழல்' திரைப்படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது, வருகிற 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் மாய நிழல் படம் வெளியாக உள்ளது. இதனால், நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nayanthara in maya nizhal movie ott update


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->