நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா.?!
Naay sekar returns total collection
மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர், வடிவேலு ஹீரோவாக நடிக்த்துள்ள திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடிகை ரெடின் கிங்ஸ்லி, ஷிவாணி நாராயணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கின்றனர்.
லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியாகிய நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.
இது குறித்து பல அதிருப்தி கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 7.4 கோடி ரூபாயை நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் அவதார் 2 திரைப்படம் திரையரங்குகளில் ஆக்கிரமிக்க துவங்கி இருப்பதால் அதற்குள் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Naay sekar returns total collection