எப்படி இருந்த மீனா இப்படி ஆயிட்டாங்க.! அவரே நினைவுகூர்ந்த பதிவு.!
Meena Remembered janaki character
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்து பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்கள் நடித்துள்ளார்.
அதன் பிறகு பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். நைனிகா விஜய் உடன் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து பிரபலமானவர்.

சமீபத்தில் நடிகை மீனா, ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருந்தார். தற்போது நடிகை மீனா கமலுடன் இணைந்து பாபநாசம் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்வேறு நடிகைகளைப் போலவே மீனாவும் சமூக வலைதளங்களில் தற்போது சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் அவ்வை சண்முகி ஜானகி மாமி கதாபாத்திரத்தை ஒப்பிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
English Summary
Meena Remembered janaki character