ஷூட்டிங் ஸ்பாட்டில் பலாப்பழத்தை வெட்டி பர்த்டே கொண்டாட்டம்.! மன்சூர் அலிகான்.. மாஸ்.!  - Seithipunal
Seithipunal


கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் மன்சூர் அலி கான்.  90ஸ் கிட்ஸ் இவரைப் பார்த்தாலே பயப்படும் அளவிற்கு  பயங்கரமான வில்லனாக வலம் வந்தவர். நடிகர் விஜயகாந்தின் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் இவர். வில்லன் நடிகராக இவரது மார்க்கெட் சரியத் துவங்கியதும்  காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சமீப காலமாக திரைப்படங்களில்  இருந்து விலகியிருந்த இவர் தற்போது தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும்  லியோ திரைப்படத்தின் மூலம் ரீயின்றி கொடுக்க இருக்கிறார். லியோ பட சூட்டிங் ஸ்பாட்டில் கோட் சூட் அணிந்து மன்சூர் அலிகான் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.எதையுமே வித்தியாசமாக செய்யும் மன்சூர் அலி கானின் கேரக்டர்  ரசிகர்களிடம் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. லோகேஷ் கனகராஜன் மன்சூர் அலிகான் இடம் பிடித்த விஷயம் அதுதான் என ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

தற்போது தனது பிறந்த நாளையும் இதே போலவே வித்தியாசமான அணுகுமுறையில் கொண்டாடி இருக்கிறார் மன்சூர் அலிகான்.பிறந்தநாளுக்கு எல்லோரும் கேக் வெட்டி கொண்டாடி நாம் பார்த்திருப்போம்.  ஆனால் நமது மன்சூர் அலிக்கு ஆண் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்த நாளை வித்தியாசமான ஸ்டைலில் கொண்டாடி இருக்கிறார்.  சரக்கு பட சூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்த நாளை கொண்டாடியவர்  இதுபோன்ற வித்தியாசமாக பிறந்த நாளை கொண்டாடியது ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

 
இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வருகின்றன. பிறந்தநாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் மன்சூர் அலி கானின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mansoor ali khan celebrate his birthday in his unique style


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->