அடக்கடவுளே! இவருக்கு இப்படியொரு சோகமா? பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ்  மலையாளம், தெலுங்கு, என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மம்தா மோகன் தாஸ். இவர் நடிப்பு  மட்டுமில்லாமல் பல  பாடல்களையும் பாடியுள்ளார்.

இவர்  தமிழில் விஷாலுடன் நடித்த  சிவப்பதிகாரம் படத்தின் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர்  குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க என பல படங்களில் நடித்துளள்ளார்.

மேலும் தொடர்ந்து  ஊமை விழிகள், உள்ளே வெளியே போன்ற படங்களிலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில்  10 years challenge என்ற ஒன்று பிரபலமாகி வருகிறது. அதில் பலரும் தங்களது தற்போதைய புகைப்படத்தை 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மம்தாவும் இதனை போன்ற தனது புகைப்படத்தை வெளியிட்டார். அதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் ஏனெனில் அதில்  10 வருடங்களுக்கு முன் தலைமுடி இல்லாத நிலையில் உள்ள புகைப்படத்தை மம்தா வெளியிட்டிருந்தார்.

View this post on Instagram

As it’s WORLD CANCER DAY, I had decided that my #10yearchallenge will have to wait until today “I GOT CANCER... CANCER DIDN’T GET ME”🌚🌝 2009 was the year that changed everything for me and impacted every plan my family had for us. Last 10 years has been quite a challenge and as I look back come 2019, I’m proud to realize that I have fought tirelessly, stayed strong and survived. Staying positive and strong for several years is very hard but if I have done it, there are a few people behind it. All Thanks to Dad-Mom(thank you is a speck of a word to express my gratitude to you), a few of my cousins who have shown me what sibling-love is and my dearest friends who always cared to call or text to check if I am ‘actually well’ and not just pretending to be ok(strong people tend to do this a lot and eventually run into depression 😄🤦🏻‍♀️🤭), all the good work that comes my way and colleagues who challenge me to perform better and to all the opportunities given to me by the universe to realize what’s right for me and what’s not Never forget Bald Heads Turn Heads 😁 HAPPY WORLD CANCER DAY! #worldcancerday #survivor #nevergiveup #dealwithit #attitude #gratitude #happiness #stressfree #challenge #runner

A post shared by Mamta Mohandas (@mamtamohan) on

 
மேலும் இதுகுறித்து மம்தா, கடந்த 10 வருடங்களுக்கு முன் 2009 ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு எனது வாழ்க்கையே முழுவதும் மாறியது.10  வருடங்கள் கடந்து 2019 ஆம் ஆண்டுக்கு வருவது பெரிய சவாலாக இருந்தது.ஆனால் நான் சிறிதும் களைப்படையாமல், வலிமையாக வாழ்ந்து வந்தேன். அவ்வாறு எப்பொழுது வலிமையாக இருப்பது எளிதல்ல.ஆனால் நான் இருந்தேன். இவ்வாறு நம்பிக்கையுடன் போராடி தற்போது கேன்சர் நோயிலிருந்து  மீண்டுள்ளதாக மம்தா பதிவிட்டுள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamta leaked 10 year challenge photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->