பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம் | தொண்டைப் புற்றுநோயால் மரணத்தின் பிடியில்..! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் (வயது 75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில்காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட்.  750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்தார்.

மேலும், அரசியலில் இறங்கிய இன்னொசன்ட், கேரளாவின் சாலக்குடி தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், பாடல் படுவது, திரைப்படம் தயாரிப்பது உள்ளிட்ட துறைகளிலும் இன்னொசன்ட்  கால் பதித்துள்ளார்.

கேரள மாநில திரைப்பட விருதுகளை மூன்று முறை பெற்றுள்ள இன்னொசன்ட், அம்மாநில நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். 

இவர் வாழக்கையில் மிக துயரமான சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டது தான். ஆனால், அதிலும் சிகிச்சைப் பெற்று குணமடைந்த இன்னொசன்ட்-க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam actor Innocent critical


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->