தளபதி 65-ல் அந்த பிரபலமா? மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் உடன் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.  இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்துள்ளது.

தளபதி 65 படத்தில் கைகோர்க்கும் பிரபலங்கள்.! நகைச்சுவை நடிகராக இவரா.?! -  Seithipunal

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டுள்ளது தொற்று குறைந்தவுடன் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayala Actor In thalapathy 65


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal